
149 நாட்கள் : வார் 2 படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிருத்திக் ரோஷன்
இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ராணுவ பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனுக்கு விடை கொடுக்கும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இது குறித்த தகவலை புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ஹிருத்திக் ரோஷன் கூறும்போது, “149 நாட்கள்.. சேசிங், ஆக்ஷன், டான்ஸ், ரத்தம், ஸ்வீட், காயங்கள்.. ஆனால் இவை அனைத்துமே ரொம்பவே ஒர்த் ஆனவை. ஜூனியர் என்டிஆர் சார் இந்த படத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றியது மிகப் பெருமையான விஷயம். கியாரா அத்வானியின் இன்னொரு கொடிய பக்கத்தை உலகம் பார்க்கப் போகிறது” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!