
40 வயது ரன்வீர் சிங் ஜோடி 20 வயது சாரா : ரசிகர்கள் கமெண்ட்ஸ்
அடுத்து 40 வயதான ரன்வீர் சிங் ஜோடியாக 20 வயதே ஆன சாரா அர்ஜுன் ஜோடியாக நடிப்பது இப்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழில் "தெய்வ திருமகள், சைவம்" உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் இந்த சாரா. "பொன்னியின் செல்வன்" படத்தில் இளம் பெண்ணாக நடித்திருந்தார்.
ஆதித்ய தர் இயக்கத்தில் சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கண்ணா, உள்ளிட்டவர்களும் நடிக்கும் "துரந்தர்" படத்தில்தான் ரன்வீர், சாரா ஜோடியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல் பார்வை வீடியோவில் ரன்வீர், சாரா ஆகியோரின் காட்சிகள்தான் இந்த சர்ச்சையை ரசிகர்களிடம் எழுப்பியுள்ளன. இது குறித்து நிறைய நெகட்டிவ் கமெண்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி உள்ளன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!