
ஓடிடியில் நேரடியாக வெளியாகும் மாதவன் படம்
விவேக் சோனி இயக்கியுள்ள இந்தப் படத்தை தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. மேலும் ஆயிஷா ராசா, மணீஷ் சவுத்ரி மற்றும் நமித் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற ஜூலை 11ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
படம் குறித்து மாதவன் கூறும்போது "நான் இதற்கு முன்பு நடித்த எந்தவொரு காதல் கதையையும் போல "ஆப் ஜெய்சா கோய்" இல்லாமல் முழுக்க முழுக்க மனித மனங்களைச் சார்ந்தது. நான் நடித்த மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஸ்ரீரேணுவும் ஒருவர். கம்பேனியன்ஷிப்பிற்காக ஏங்கும் ஒருவர். ஆனால், அதை எப்படிக் கேட்பது என்று கூட தெரியாத உள்ளுக்குள் அதிக உணர்ச்சிவசப்பட்டவர்.
இந்தப் படம் அதிரடியாக இருக்காது. ஆனால் பொறுமையாகவும், மென்மையாகவும் பார்ப்பவர்களை ஆழமாகப் பாதிக்கும் வகையிலும் இருக்கும். வாழ்க்கையிலோ அல்லது காதலிலோ புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தவர்களிடம் இது எவ்வாறு பேசுகிறது என்ற கருவால் நான் ஈர்க்கப்பட்டேன். "ஆப் ஜெய்சா கோய்" சொந்த விதிமுறைகளின்படி வாழத் தொடங்குவதற்கு வயது ஒரு தடையில்லை, நீங்கள் எப்போது வேண்டுமானலும் வாழத் தொடங்கலாம் என்பதை அழுத்தமாக பேசும் கதை” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!