
கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ்
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலை அவர் வெளியிட்டதை அடுத்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க பெங்களூருக்கு அலைய வைக்க வேண்டாம் என்று டாக்ஸிக் படப்பிடிப்பையே மும்பைக்கு மாற்றுமாறு கூறியிருக்கிறார் யஷ். இதனால் டாக்ஸிக் படத்தில் கியாரா அத்வானி நடிக்கும் பெரும்பாலான காட்சிகள் மும்பையிலேயே படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள். இதேப்போல் ஹிந்தியில் தயாராகும் ராமாயணா என்ற படத்தில் ராவணனாக நடிக்கும் யஷ், அந்த படத்திலும் இணை தயாரிப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!