
கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம்
கரிஷ்மா, சஞ்சய் இருவரும் 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2016ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். சஞ்சய் கபூர் சிக்ஸ்ட் இந்தியா என்ற நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கிறார்.
விவாகரத்து பெறுவதற்கு முன்பாக சஞ்சய் மற்றும் அவரது அம்மா தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும், வரதட்சணை கொடுமை என அவர்கள் மீது வழக்கு தொடுத்திருந்தார் கரிஷ்மா.
விவாகரத்து பெற்ற பின் பிரிய சச்தேவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் சஞ்சய். நேற்று அகமதாபாத் விமான விபத்து பற்றி கூட இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். போலோ விளையாடிய போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என செய்தி வெளியாகி உள்ளது.
தன் முன்னாள் கணவர் மறைவு குறித்து கரிஷ்மா சமூக வலைத்தளத்தில் இன்னும் எந்தப் பதிவும் பதிவிடவில்லை கரிஷ்மா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!