
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் திஷா பதானி
ஜூன் 01, 2025
Advertisement
சூர்யா நடித்த கங்குவா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை திஷா பதானி. தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர், ஏற்கனவே ஜாக்கி சானின் ‛குங்பூ யோகா" என்ற சீன படத்தில் நடித்திருக்கிறார். தற்போது ‛ஹோலி கார்ட்ஸ்" என்ற இன்னொரு ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். ஆக்ஷன், திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆஸ்கர் விருது பெற்ற கெவின் ஸ்பேசி இயக்கி உள்ளார். இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ காட்சி கடந்த ஜனவரி மாதம் மெக்சிகோவில் வெளியிடப்பட்டு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. திஷா பதானி நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் இதுவாகும்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!