
12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான்
அதாவது 1989ல் ராக் என்கிற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறி நாடோடியாக தெருவில் சுற்றும் மனிதனாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு அழுக்கடைந்த தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து 12 நாட்கள் குளிக்காமலேயே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என்று கூறியுள்ளார் அமீர்கான்.
அது மட்டுமல்ல மீண்டும் ஒருமுறை அதாவது 1998ல் குலாம் என்கிற படத்தில் நடித்தபோது கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஒரு வாரத்திற்கு மேல் படமாக்கப்பட்டது. அந்த சண்டைக் காட்சியில் மோதும்போது அடிபட்ட தழும்புகள், காயங்கள் இவை எல்லாம் குளித்தால் மறைந்துவிடும். அதுமட்டுமல்ல குளித்துவிட்டு மறுநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் ஒரு பிரஸ் லுக் மீண்டும் வந்துவிடும். இதனை தவிர்ப்பதற்காக அந்த சண்டைக்காட்சிகளை படமாக்கிய நாட்களில் கிட்டத்தட்ட ஒரு வாரம் குளிக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் அமீர்கான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!