
மும்பையில் அமீர்கானை சந்தித்த அல்லு அர்ஜுன்
இந்த நேரத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கானை நேற்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் அல்லு அர்ஜுன். ஏற்கனவே அமீர்கானின் நடிப்பு திறமை குறித்து பல பேட்டிகளில் பாராட்டி பேசி வந்துள்ள அல்லு அர்ஜுன், தனது புதிய படத்தில் ஏதேனும் முக்கிய வேடத்தில் அவரை நடிக்க வைப்பது சம்பந்தமாக கூட சந்தித்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது ஹிந்தியில் சீதாரே ஜமீன் பர் என்ற படத்தை தயாரித்துள்ளார் அமீர்கான். இந்த படம் விருது பெற்ற ஸ்பானிஷ் படமான சாம்பியன்ஸ் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படம் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!