
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல்
இந்த படம் பெண்களுக்கான ஒரு உற்சாக தூண்டுதல் அளிக்கும் விதமாக அதே சமயம் நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் வெளியான சில நாட்களுக்கு பின் பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த படத்தை பார்த்துவிட்டு இதன் இயக்குனரை ரொம்பவே சிலாகித்து பாராட்டினார். அதன்பிறகு விபீன்தாஸ் அமீர்கானை நேரிலேயே சந்தித்தார். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை அமீர்கானே தயாரிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அசீஸ் நெடுமங்காடி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “அமீர்கான் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரிக்க ரொம்பவே ஆர்வமாக இருந்தார். இந்த கதை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. ஆனால் மலையாள படத்தில் நடித்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ற மாதிரி பாலிவுட்டில் பொருத்தமான நட்சத்திரங்களை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. மலையாளத்தில் நடித்தவர்களை கூட இங்கே நடிக்க வைக்கலாமா என்கிற யோசனையும் கூட செய்தார்கள், ஆனால் முழுமையான நட்சத்திர தேர்வு இந்த படத்திற்கு அமையாமல் போனதால் ஒரு கட்டத்தில் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!