
உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது
"அஜய் : தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி" என்று படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் யோகி ஆதித்யநாத் வேடத்தில் அனந்த் ஜோஷி நடிக்கிறார். பரேஷ் ராவல், தினேஷ் லால் யாதவ், அஜய் மெங்கி, பவன் மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரவீந்திர கவுதம் இயக்குகிறார்.
இந்த படத்தில் யோகி ஆதித்யநாத் துறவியாக இருந்து எப்படி முதல்வர் ஆனார் என்பது காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். அதில், ""எல்லாவற்றையும் அவர் துறந்தார். ஆனால் மக்கள் அவரை தங்களுடையவராக ஆக்கிக் கொண்டனர்"" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!