
தமிழில் வெளியாகும் ஹிந்தி படம்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடுகிறது. வருகிற 21ம் தேதி இந்தியா முழுவதும் ஒரே நாளில் வெளியாகிறது. தென்னிந்திய மொழிகளில் படத்திற்கு "கிஸ் கிஸ் கிஸிக்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஷிவ் ஹரே கூறும்போது, "காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமான "பிண்டு கி பப்பி" கவர்ச்சிமிகு இளைஞனான பிண்டு வாழ்வில் ஏற்படும் காதல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களைச் சொல்கிறது. அவன் ஒரு இளம் பெண்ணைச் சந்திக்கையில், அவன் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. ஒரு முழுமையான என்டர்டெயினராக அனைத்து அம்சங்களுடன் கூடிய காமெடிப் படமாக, இப்படம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும்" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!