
இயக்குனர் சீமா கபூரின் சுயசரிதை வெளியீடு : திரைப்பிரபலங்கள் பங்கேற்பு
சீமா கபூர் கூறுகையில், ‛‛இந்த நிகழ்ச்சிக்கு வருதை தந்த அனுபம் கெர், பரேஷ் ராவல் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் வாழ்வில் இதை மறக்க மாட்டேன். என் தாய்வழி தாத்தா ஒரு புரட்சியாளர். அவர்கள் பெங்காலியை சேர்ந்த கலைஞர்களும் கூட. என் தாத்தா ராணுவத்தில் கர்னலாக இருந்தார். ஆனால் என் அப்பா டில்லிக்கு வந்து 250 பேர் அடங்கிய நாடக கம்பெனியை துவக்கிவிட்டார். அதன்பின் சினிமா தாக்கத்தால் நாடகங்கள் வெகு தொலைவில் சென்றன. மெல்ல மெல்ல நாடக கம்பெனிகள் மூடப்பட்டன. இருப்பினும் கடன்கள் பெற்று, அம்மாவின் நகை, புடவைகளை விற்று கலைஞர்களின் தேவைகளை அப்பா பூர்த்தி செய்தார்"" என்றார்.
அனு கபூர் கூறுகையில்,‛‛எனது சகோதரி சீமா கபூரின் சுயசரிதை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. சீமா எத்தனையோ வலிகளையும், சித்ரவதைகளையும், துயரங்களையும் கடந்து வந்திருக்கிறார். அவர் துணிச்சலான பெண். எங்களுக்கு ஒரே ஒரு சகோதரி. நிறைய சிரித்திருக்கிறார், அழுதிருக்கிறார். அனைவருக்கும் உதவ வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பவர். இந்த சுயசரிதை சோகங்களின் கதை. எனது சகோதரி தனது பெற்றோருக்கு மிகுந்த மரியாதை அளித்துள்ளார். இந்த புத்தகம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது"" என்றார்.
பரேஷ் ராவல் கூறுகையில், ‛‛சுயசரிதை எழுதுவது எளிதான காரியம் அல்ல, சவாலானது. அவரின் இந்த படைப்பில் நான் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். அவரின் சுயசரிதையை கண்டிப்பாக படிப்பேன்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!