
மறைந்த பாலிவுட் நடிகர் உத்தம் மொகந்தி உடலுக்கு அரசு மரியாதை
உத்தம் மொகந்தியின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "ஒடிசாவின் பிரபல நடிகர் உத்தம் மொகந்தியின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவு ஒடியா கலைத் துறையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடியா திரையுலகில் அவர் ஏற்படுத்திய தாக்கம் அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, துயருற்ற குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
மறைந்த உத்தம் மொகந்தி, ஒடியா சினிமாவில் பலமான ஆளுமையாக இருந்தார். ஒடிசா மாநில அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது உடலுக்கு முதல்வர் மோகன் சரண் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடந்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!