
ரூ.400 கோடி வசூலைக் கடந்த சாவா
எதிர்பார்ப்புக்கும் மேலாக இப்படம் வசூலைக் கொடுத்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 150 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட சரித்திரப் படம் தற்போது 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. நேற்று முன் தினம் படம் வெளியான பின் வந்த இரண்டாவது சனிக்கிழமையன்று கூட இப்படம் நிகர வசூலாக 44 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
"புஷ்பா 2" படம் இதுபோல வசூலித்த 46 கோடி வசூலை 2 கோடி வித்தியாசத்தில் முறியடிக்க முடியாமல் போய்விட்டது. ஹிந்தித் திரையுலகத்தில் வேறு எந்த ஒரு படமும் படம் வெளியான இரண்டாவது வார சனிக்கிழமையில் இவ்வளவு வசூலைக் குவித்ததில்லை. இப்படத்தின் வெற்றியும், வரவேற்பும், வசூலும் பாலிவுட்டினரை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!