
100 கோடியைக் கடந்த ஸ்கை போர்ஸ்
படத்தின் பட்ஜெட் 150 கோடிக்கும் அதிகமாக இருந்தாலும் இன்னும் சில கோடிகள் வசூலித்து நஷ்டத்தைத் தவிர்க்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். ஓடிடி, சாட்டிலைட் உரிமைகள் மூலமும் குறிப்பிடத்தக்க வருமானம் வரவும் வாய்ப்புள்ளது.
தெலுங்கு மொழிப் படங்களின் தாக்கத்தால் பாலிவுட்டில் டிரெண்ட் மாறிவிட்டதால் அங்கு சில சீனியர் நடிகர்களின் படங்கள் பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அக்ஷய்குமாருக்கு 100 கோடி கிளப் வசூலுடன் ஆரம்பமாகியுள்ளது. இது அப்படியே தொடர வேண்டும் என அவரது ரசிகர்களும் விரும்புகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!