
மும்பை இசை திருவிழாவில் அர்மான் மாலிக், அமித் திரிவேதி நீத்தி மோகன்
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர், பாடகர் அமித் திரிவேதி, “என்னைப் பொறுத்தவரை, கதைகளை ட்யூன்கள் மூலம் பகிர்ந்து கொள்வதற்கும் மக்களுடன் ஆழமாக இணைக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். இதில் நானும் ஒரு பகுதியாக பங்கேற்றது மகிழ்ச்சி"" என்றார்.
பாடகர் அர்மான் மாலிக் கூறுகையில், "இசை எப்போதுமே மக்களுடன் சேர ஒரு வழியாகும். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எந்த மொழி பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு நகரத்திலும் மக்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மக்களைச் சந்திக்கவும், வெவ்வேறு கலாச்சாரங்களை அனுபவிக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இசை எல்லோரையும் எப்படி ஒன்றிணைக்கிறது என்பதை உணர முடிகிறது"" என்றார்.
பாடகி நீத்தி மோகன் பேசுகையில், "உலகின் மொழியாக எப்போது இசை இருக்கிறது. இது மக்களை ஒன்றாக இணைக்கிறது. இந்த தளம் கலைஞர்களுக்கு ஒரு அருமையான இடமாகும். இங்கு ரசிகர்களுடன் இசை கலைஞர்கள் இன்னும் ஆழமாக இணைத்து கொள்ள முடியும். பல்வேறு இசை டியூன்களுடன் பயணித்தது மறக்க முடியாத தருணமாக உள்ளது"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!