
தோல்வியை நோக்கி தெறி ஹிந்தி ரீமேக்
ஹிந்தித் தயாரிப்பாளர்கள் சிலருடன் இணைந்து அட்லியும் தயாரிக்க வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க வெளியான படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 20 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. முதல் நாள் வசூலானதை விட இரண்டாம் நாள் வசூல் பாதியாகக் குறைந்துவிட்டது. சுமார் 150 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் இப்போதைய சூழலில் 50 கோடி வசூலைக் கடந்தாலே அதிகம் என்கிறார்கள்.
இயக்குனராக வெற்றி பெற்ற அட்லி தயாரிப்பாளராக இரண்டாவது தோல்வியைத் தழுவுகிறார். தயாரிப்பாளராக அவர் முதலில் தயாரித்து தமிழில் 2017ல் வெளிவந்த "சங்கிலி புங்கிலி கதவைத் தொற" படம் தோல்வியைத் தழுவியது. ஹிந்தியிலும் பெரிய தோல்வி என்பதால் இனி தயாரிப்புப் பக்கம் அவர் போவாரா என்பது சந்தேகம்தான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!