
புஷ்பா 2 காட்சியை ரத்து செய்துவிட்டு பேபி ஜான் பார்க்க வற்புறுத்திய தியேட்டர் நிர்வாகம்
அதேசமயம் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸ் ஆக வரும் தவான் நடித்த பேபி ஜான் என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள புகழ் பெற்ற ராஜ் மந்திர் என்கிற தியேட்டரில் புஷ்பா 2 காலைக்காட்சி படம் பார்க்க புக்கிங் செய்து வந்த ரசிகர்களை காட்சி ரத்தானதாக கூறி அதற்கு பதிலாக பேபி ஜான் படத்தை பாருங்கள் இன்று தியேட்டர் நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர். கூட்டம் குறைவாக இருந்ததால் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள் அந்தக் கட்டணத் தொகையை திருப்பித் தருவதற்கு பதிலாக பேபி ஜான் திரைப்படத்தை பார்க்க வற்புறுத்தியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
குறிப்பாக 20 நபர்கள் இருந்தாலே ஒரு காட்சியை ரத்து செய்யாமல் திரையிட வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆட்கள் நிறைய பேர் வந்தும் கூட புஷ்பா 2 காட்சியை ரத்து செய்தது பேபி ஜான் திரைப்படத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காகத்தான் என ரசிகர்கள் பலர் கொந்தளித்து தியேட்டர் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!