
நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச்
அவர் கூறுகையில், ‛‛நான் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து பாலிவுட் எனக்கு வரவேற்பு கொடுத்து வருகிறது. சினிமா பின்னணி இல்லாமல் ஒருவர் வந்தால் அவருக்கான அடையாளம் கிடைக்க காலதாமதம் ஆகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம் இரண்டு மூன்று படங்களுக்கு பின் நீங்கள் கடினமாக உழைத்தால் உங்கள் வெற்றி, சாதனையை யாராலும் தடுக்க முடியாது. நெப்போடிசத்திற்கு பாலிவுட்டை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. பார்வையாளர்களும், ஊடகங்களும் ஒரு காரணம். ஏனென்றால் அவர்களை பெரிதாக காட்டுவதால் ரசிகர்களின் எண்ணமும் அப்படியே அமைகிறது. இது ஒரு வட்டம் போலத்தான். என்னை பொறுத்தவரையில் திறமை இருந்தால் உங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் தேடி வரும், திறமை இல்லை என்றால் வாய்ப்புகள் குறைவு தான்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!