
பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது போக்சோ வழக்கு பதிவு
"ஆல்ட் பாலாஜி" ஓடிடி தளத்தில் 2021ம் ஆண்டில் ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோரது தயாரிப்பில் "காந்தி பாட்டி" என்ற "அடல்ட்" நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் மைனர் நடிகையின் ஆபாசமான சில காட்சிகள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் ஏக்தா, ஷோபா ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட சில பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த ஒடிடி தளத்தில் "காந்தி பாட்" ஷோ இடம் பெறவில்லை. பெண் தயாரிப்பாளர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!