
விவாகரத்து சர்ச்சைக்கு நிரந்தர முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்!
கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் திருமணத்தின் போது தனது கைவிரலில் அபிஷேக் பச்சன் அணிந்த மோதிரத்தை கழட்டி இருந்தார் ஐஸ்வர்யா ராய். ஆனால் அதையடுத்து இந்த விவாகரத்து குறித்த கேள்விக்கு ஒரு பேட்டியில் மறுப்பு தெரிவித்திருந்தார் அபிஷேக் பச்சன்.
என்றாலும் அந்த செய்தி தொடர்ந்து பரவி வந்தது. அதனால் அந்த சர்ச்சைக்கு நிரந்தர முடிவு கட்டும் விதமாக தற்போது மீண்டும் அந்த மோதிரத்தை தனது விரலில் அணிந்தபடி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ஐஸ்வர்யாராய்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!