
தொடர் தோல்வியில் ஜான்வி கபூர்
“ரூஹி, மிலி, மிஸ்டர் அன்ட் மிசஸ் மஹி” ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியானது. கடந்த வாரம் வெளிவந்த "உலாஜ்" படமும் தியேட்டர்களில் வெளியாகி தடுமாறி வருகிறது. முதல் படத்திற்குப் பிறகு சரியான வெற்றியைக் கொடுக்க முடியாமல் இருக்கிறார் ஜான்வி. “கன்ஜன் சக்சேனா, குட் லக் ஜெர்ரி, பவால்" ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.
தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக "தேவரா" படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ராம் சரணின் 16வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஹிந்தித் திரையுலகம் அவருக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும் தெலுங்கில் பெரும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
அம்மா ஸ்ரீதேவியைப் போல தென்னிந்திய மொழிகளில் வெற்றி பெற்று, பின் ஹிந்தியிலும் அந்த ராசியைத் தொடரவும் வாய்ப்புள்ளது. தேவரா வெற்றிதான் அவருக்கு பாலிவுட் வெற்றிக் கதவைத் திறக்க வேண்டும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!