
ஷாரூக்கானுக்கு பிரத்யேக தங்க நாணயம் வெளியிட்ட பாரீஸ் மியுசியம்
அப்படி ஒரு பெருமையைப் பெறும் முதல் இந்திய நடிகர் ஷாரூக் என்பது குறிப்பிடத்தக்கது. மெழுகு சிலைகள் அடங்கிய மியூசியம்தான் இந்த கிரெவின். ஷாரூக்கானுக்கு உலகம் முழுவதும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், செக் குடியரசு, தாய்லாந்து, இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஷாரூக்கானின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டில் மட்டும் "பதான், ஜவான்" என இரண்டு 1000 கோடி படங்களில் நடித்து வசூல் சாதனை புரிந்தவர் ஷாரூக்கான். பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளையும் பெற்றவர் ஷாரூக். அடுத்து, அவருக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள 77வது லோகார்னா திரைப்பட விழாவில் மதிப்பு மிக்க "பர்டோ அல்ல கரியரா" விருது வழங்கப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!