
நாகினி ஹினா கானுக்கு புற்றுநோய்
இந்த நிலையில் தனக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தனது இன்ஸ்ட்ராகிராமில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனக்கு மூன்றாம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நான் வலிமையானவள், உறுதியானவள், இந்த நோயை வெல்வேன் என்று நம்புகிறேன்.
சிகிச்சை தொடங்கிவிட்டது. தயவு செய்து எனது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த கடினமான பயணத்தில் உங்கள் தனிப்பட்ட அனுபவங்கள், ஆதரவான பரிந்துரைகள் எனக்கு உதவும் . உங்கள் பிரார்த்தனைகள், ஆசிகள் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!