
358 கோடி ரூபாய் வைர நகை அணிந்த பிரியங்கா
இந்த நிலையில் பிரியங்கா இத்தாலி நாட்டின் தலைநகரான ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 358 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகை அணிந்து அனைவரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறார். ரோமின் மிகப்பெரிய நகைக்கடையான "பல்கேரி"யின் 140வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது. இந்த விழாவில் புதிய உயர்தர நகை சேகரிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போதுதான் பிரியங்கா சோப்ரா 358 கோடி ரூபாய் வைர நகை அணிந்துள்ளார்.
இந்த விழாவில் பல்கேரி நிறுவனம் ஸ்பெஷலாக வடிவமைத்த பிரியங்காவின் இந்த நகைதான் அனைவரது கண்களையும் பறித்திருக்கிறது. "செர்ப்பென்டி அட்ரினா" எனப் பெயர் கொண்ட இந்த நகையில் 140வது ஆண்டு விழாவை முன்னிட்டு 140 காரட் வைரங்களைக் கொண்டு சுமார் 2800 மணி நேரம் செலவழித்து இதை வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பிரியங்காவுடன் ஹத்வே, லியூ இபை போன்ற ஹாலிவுட் நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!