
பய்யா ஜி: மனோஜ் பாஜ்பாயின் 100வது படம்
"கேங்ஸ் ஆப் வசிப்பூர்", உள்ளிட்ட படங்கள் மூலமும், "தி பேமிலி மேன்" உள்ளிட்ட வெப் தொடர்கள் மூலமும் இந்தியா முழுக்க அறிந்த நடிகர் ஆனார். தமிழில் அஞ்சான், சமர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதுவரை 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது அவர் பல படங்களில் நடித்து வந்தாலும் அவரது 100வது படமாக வெளிவருகிறது "பய்யா ஜி". இந்த படத்தை அபூர்வ் சிங் கார்கி இயக்குகிறார். மனோஜ் பாஜ்பாயுடன் சோயா ஹுசைன், சுவிந்தர் விக்கி, ஜிதின் கோஸ்வாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் வருகிற 24ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பை அந்தேரியில் நடந்தது.
இதில் பேசிய மனோஜ் பாஜ்பாய், “நான் 10 படங்களுக்கு மேல் நடிப்பேன் என நினைத்ததில்லை. ஆனால் வாழ்க்கை என்னை 100 படங்களில் நடிக்க அனுமதித்துள்ளது. இதனால் நான் மட்டுமே கடின உழைப்பை செய்கிறேன் என்று அர்த்தமில்லை. அனைத்து கலைஞர்களுமே தினமும் போராடுகிறார்கள். கடவுள், ரசிகர்களின் ஆதரவினால் மட்டுமே நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!