
தீபிகா படுகோனேவை பிரிகிறாரா ரன்வீர் சிங் : பாலிவுட்டில் பரபரப்பு
இந்த நேரத்தில் ரன்வீர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமண புகைப்படங்களை திடீரென்று நீக்கியுள்ளார். இதனால் பாலிவுட் மீடியாக்களில் ரன்வீர் சிங்கும், தீபிகாவும் பிரியப் போவதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியானது .
அதையடுத்து ரன்வீர் சிங் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், என்னுடைய இன்ஸ்டா பக்கத்திலிருந்து திருமண புகைப்படங்களை நீக்கவில்லை. அதை ஆர்கேவ் செய்து வைத்திருக்கிறேன் என்று உடனடியாக ஒரு தகவல் வெளியிட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். மேலும் தற்போது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் சிங்கம் அகைன் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!