
‛ஹவுஸ்புல் 5 - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா
தயாரிப்பாளர் சஜித் கூறுகையில், ‛‛ஹவுஸ்புல் 5-யில் அபிஷேக்கை மீண்டும் கொண்டு வருவதில் மகிழ்ச்சி. அவருடைய அர்ப்பணிப்பு, நகைச்சுவை ஆகியவை எங்கள் படத்தை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்"" என்றார்.
அபிஷேக் கூறுகையில், ‛‛ஹவுஸ்புல் சீரிஸ் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை படம். இதில் நடிப்பதன் மூலம் மீண்டும் எனது வீட்டிற்கு திரும்புவது போன்று உணர்கிறேன். சஜித் உடன் பணிபுரிவது மகிழ்ச்சி. என் சக நடிகர்களான அக்ஷய் மற்றும் ரித்தேஷ் ஆகியோருடன் படப்பிடிப்பு தளத்தில் வேடிக்கையாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்"" என்றார்.
ஹவுஸ்புல் 5 படம் அடுத்தாண்டு ஜூன் 6ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!