
ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான்
“ஏஆர் முருகதாஸ் வித்தியாசமான ஒரு மனிதர். எந்த ஒரு ஒளிவுமறைவும் அவரிடம் கிடையாது. ஒரு காட்சி பற்றி அவரிடம் நாம் ஒரு ஆலோசனை சொன்னால் அது பற்றிய அவரது கருத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். அது நன்றாக இல்லை என்றால், சார் நன்றாக இல்லை என எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்வார். அதேசமயம் அந்த ஐடியா சிறப்பாக இருந்தால் சூப்பர் சார், சூப்பர் சார் என்பார். அதிலும் எந்தவித ஒளிவுமறைவும் இருக்காது. இப்படிப்பட்ட நல்ல குணத்தை அவரிடம் இருந்து நான் எடுத்துக் கொண்டேன்,” என்றார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த "கஜினி" படம்தான் ஹிந்தித் திரையுலகத்தின் முதல் 100 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க தமிழில் ஒரு படத்தையும், சல்மான்கான் நடிக்க ஹிந்தியில் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!