
சல்மான் கானின் தவறான எக்ஸ் பதிவு
இரண்டாவது மனைவியான கிரண் ராவைப் பிரிந்தாலும் அவர் இயக்கிய "லாபட்டா லேடீஸ்" படத்தை கிரண் ராவுடன் இணைந்து தனது ஆமீர் கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கான சிறப்புக் காட்சியை சல்மான் கான் கலந்து கொண்டு பார்த்திருந்தார். அப்போது சல்மான், ஆமீர் இருவரும் பாசத்துடன் கட்டித்தழுவிக் கொண்ட வீடியோ பாலிவுட் ரசிகர்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் படத்தைப் பாராட்டி, “கிரண் ராவின் "லாபட்டா லேடீஸ்" படத்தைத் தற்போது பார்த்தேன். வாவ் வாவ்… கிரண். நானும், எனது அப்பாவும் மிகவும் ரசித்தோம். இயக்குனராக அறிமுகமானதற்கு வாழ்த்துகள், சூப்பர்.. நீங்கள் எப்போது என்னுடன் வேலை செய்வீர்கள், என்றும் கேட்டுள்ளார்.
"லாபட்டா லேடீஸ்" கிரண் ராவின் முதல் படம் இல்லை, இரண்டாவது படம். இதற்கு முன்பு 2011ல் வெளிவந்த "தோபி காட்" என்ற படத்தை இயக்கியுள்ளார். அது தெரியாமல் அல்லது மறந்து போய் சல்மான் டுவீட் போட்டிருப்பதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!