
தென்னிந்திய தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார் : ஹிந்தி நடிகை குற்றச்சாட்டு
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது : ‛‛தென்னிந்திய படம் ஒன்றின் ஆடிசனுக்கு சென்றிருந்தேன். அந்த படத்திற்கு ஒப்பந்தம் போட வரச் சொன்னார்கள். நான் என் அம்மாவிடம் இந்த செய்தியை மகிழ்ச்சியாக கூறிவிட்டு கிளம்பிச் சென்றேன். அதேசமயம் இவ்வளவு எளிதாக நமக்கு எப்படி இந்த வாய்ப்பு அமைந்தது என யோசித்தேன். ஒப்பந்தத்தில் கையெழுத்திட சென்றபோது என்னை மட்டும் ரூமிற்கு அழைத்தனர். என்னுடன் வந்தவர் வெளியே அமர வைக்கப்பட்டார்.
எனக்கு அந்த சமயம் 19 வயது தான். சினிமாவில் நாயகியாக தீவிரமாக முயற்சித்து வந்தேன். தயாரிப்பாளருடன் நான் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி அங்கிருந்தவர் கேட்டார். அதற்கு நான் உங்கள் தயாரிப்பாளருக்கு திறமையான நடிகை தேவையில்லை, உடன் படுக்க ஒரு பெண் மட்டுமே போதும். நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். இதுபோன்று பல நிகழ்வுகளை எதிர் கொண்டுள்ளேன். அதை நினைத்தாலே ஒரு மாதிரியாக இருக்கிறது"" என்றார் அங்கிதா.
அந்த தென்னிந்திய தயாரிப்பாளர் யார் என்பதை அங்கிதா குறிப்பிடவில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!