
ஆர்டிக்கிள் 370 விழிப்புணர்வு படம் : பிரியாமணி
"இந்த படம் விழிப்புணர்வு படம் தானே தவிர விவாத படம் அல்ல" என்று பிரியாமணி கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, “ஒரு பிரிவினர் இப்படத்தை பிரச்சாரப் படம் என்று கூறுகின்றனர். இது ஒரு விழிப்புணர்வுப் படம். இந்த கதைகள் மக்களுக்கு சொல்லப்பட வேண்டும். இப்படத்தை நாங்கள் கையில் எடுக்கும்போது, மக்களில் பலபேருக்கு தெரியாத இதுபோன்ற ஒரு வரலாற்று நிகழ்வை அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே எங்களுடைய பிரதான நோக்கமாக இருந்தது. இப்படத்தில் காட்டப்பட்ட அனைத்தும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!