
யாமி கவுதம், பிரியாமணி படத்திற்கு அரபு நாடுகளில் தடை
இந்த படம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசுகிறது. சுமார் 20 கோடியில் தயரான இந்த படம் 50 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது. இந்த படத்தில் பிரியாமணி காஷ்மீர் மாநில பாதுகாப்பு செயலாளர் ராஜேஸ்வரி சாமிநாதன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார், யாமி கவுதம் தேசிய பாதுகாப்பு படை ஏஜெண்டாக நடித்துள்ளார்.
இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று அரேபிய நாடுகள் தங்கள் நாட்டில் படத்தை திரையிட தடை விதித்திருக்கிறது. இப்படம் வெளியாகும் முன்பு ஜம்மு-காஷ்மீரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள இப்படம் உதவும்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!