
புத்த மதத்தை தழுவிய பாலிவுட் நடிகை
பல வருடங்கள் மாடலிங் துறையில் இருந்த பார்க்கா மதன் 1994ம் ஆண்டு நடைபெற்ற "மிஸ் இந்தியா" போட்டியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோருடன் போட்டியிட்டார். இதில் சுஷ்மிதா சென் வெற்றி பெற்றார்.
கடந்த 2012ம் ஆண்டு இவர் நடிப்பை விட்டு விலகுவதாகவும் புத்த மதத்தைத் தழுவப் போவதாகவும் அறிவித்தார். அதன்பிறகு தலையை மொட்டை அடித்துக் கொண்டு ஒரு துறவியை போல வாழ்ந்தார். என்றாலும் தற்போது முறைப்படி புத்த துறவியாக மாறி இருக்கிறார். கர்நாடகாவில் உள்ள செரா ஜெய் மடாலயத்தின் ஹர்டாங் காங்செனில் புத்த துறவியாக ஆனார். தனது பெயரை வென் கைல்டென் சம்டென் எனவும் மாற்றினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!