
அனிமல் பட இயக்குனருக்கு கங்கனா கொடுத்த அதிர்ச்சி
அதையடுத்து அவருக்கு பதில் கொடுத்த இயக்குனர் சந்தீப் ரெட்டி, கங்கனா ஒரு சிறந்த நடிகை. அவரது குயின் படம் எனக்கு பிடிக்கும். எனது படங்களில் அவருக்கேற்ற கேரக்டர் இருந்தால் கண்டிப்பாக அவரை நடிக்க அழைப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஒரு அதிர்ச்சி பதில் கொடுத்து இருக்கிறார் கங்கனா.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், ‛‛உங்கள் படத்தில் நடிக்க தயவுசெய்து என்னை அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் உங்களது ஆணாதிக்க கேரக்டர்கள் என்னால் பெண்ணியவாதியாக மாறிவிடுவார்கள். நீங்கள் ஹிட் படங்களாக கொடுத்து வருவதால் பாலிவுட்டுக்கு தேவை. ஆனால் உங்கள் படங்களில் நடிப்பதற்கு எனக்கு அழைப்பு விடுக்க வேண்டாம்"" என்று தெரிவித்திருக்கிறார் கங்கனா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!