
சைத்தானை தொடர்ந்து மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும் ஜோதிகா!
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹிந்தியில் சைத்தான் என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மாதவன், ஜோதிகா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் சைத்தான் படத்தை அடுத்து ஹிந்தியில் ராஜ்குமார் ராவ் என்பவர் நடிப்பில் உருவாகி வரும் ஸ்ட்ரீட்-2 என்ற படத்திலும் தற்போது நடித்து வரும் ஜோதிகா, இந்த படத்தை தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!