
சினிமா ஆகிறது பிரதமர் மோடியின் சாதனைகள்
இந்த படம் அவர் பிரதமரான பிறகு செய்த சாதனைகளை மையமாக கொண்டு உருவாகிறது. குறிப்பாக சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது, பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி அறிமுகம், அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை போன்ற முக்கிய நிகழ்வுகள் படத்தில் இடம்பெற இருக்கின்றன.
சி.எச்.கிராந்தி குமார் இயக்கும் இந்த படத்துக்கு "விஸ்வநேதா" என்று டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. அபய் தியோல், நீனா குப்தா, அனுபம் கெர், பல்லவி ஜோஷி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். எம்.எம்.கீரவாணியின் மகன் கால பைரவா இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. நரேந்திர மோடியாக நடிக்க நடிகர் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!