
காதலை வெளிப்படையாக சொன்ன ஜான்வி கபூர்
இதில் பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்.டி.ஆரின் புதிய படமான "தேவரா" மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்திருக்கிறார். ஜான்வி கபூர் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்து வருகிறார். இருவரும் ஆண்டு தோறும் திருப்பதி கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்து சென்றனர். பல பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டனர். ஆனால் ஜான்வி கபூர் தனது காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஆனால் அதனை தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியில் புகழ்பெற்ற "காபி வித் கரண்" நிகழ்ச்சியில் பங்ககேற்ற அவரிடம் "ஸ்பீட் டயல் லிஸ்ட்டில் உள்ள மூன்று பேர் யார்?" என்று கேட்க, அதற்கு ஜான்வி "அப்பா, தங்கச்சி அப்புறம் ஷிக்கு" எனக் கூறி உள்ளார். அதோடு ஷிகர் பஹாரியாவை டேட் செய்வதையும் ஒத்துக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தங்கை குஷியும் கலந்து கொண்டார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!