
நடிகையை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்த பிரபல ஒளிப்பதிவாளர் ; ரன்வீர் சிங் வாழ்த்து
இந்த நிலையில் தற்போது அனுஷா எல்ஸா வர்கீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜோமோன் டி ஜான். இவர்களது திருமணம் கேரளாவில் உள்ள குமரகோம் பகுதியில் நடைபெற்றது. ஜோமோனுக்கு பிரபலங்களான பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014ல் மலையாள நடிகையான ஆன் அகஸ்டின் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோமோன் டி ஜான். ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2020ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்த நிலையில் தான் தற்போது மறுமணம் செய்து கொண்டுள்ளார் ஜோமோன் டி ஜான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!