
இத்தாலிய அரசின் உயரிய விருது பெற்ற கபீர் பேடி
இந்த நிலையில் இத்தாலியின் உயரிய விருதான "ஆபீசர் ஆப் ஆர்டர் ஆப் மெரிட்" என்கிற விருதை கபீர் பேடிக்கு வழங்கி கவுரவித்துள்ளது இத்தாலி அரசாங்கம். சமீபத்தில் மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவருக்கான இந்த விருதை இத்தாலிய அரசு சார்பாக அதிகாரிகள் வழங்கினார். இந்த விருதுக்கான சான்றிதழில் இத்தாலிய அதிபரும், இத்தாலிய பிரதமரும் கையொப்பமிட்டு உள்ளனர்.
இந்த விருது பெற்றது குறித்து கபீர் பேடி கூறும்போது, “இத்தாலிய அரசின் உயரிய விருதான ஆர்டர் ஆப் மெரிட் என்கிற விருதைப் பெற்றுள்ளதன் மூலம் இத்தாலியில் வாழ்ந்த என்னுடைய வாழ்க்கை முழுமை அடைந்ததாக நினைக்கிறேன். 12 வருடங்களுக்கு முன்பு படை வீரன் என்கிற விருது கொடுத்து கவுரவித்தனர். தற்போது அதைவிட உயரிய விருது கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளனர்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!