
அமிதாப் குடும்பத்தின் அடுத்த வாரிசு…
என்னதான் "நெப்போட்டிசம்" என்று சொன்னாலும் சொந்தத் திறமை இல்லாமல் எந்த சொந்த வாரிசும் சினிமாவில் வெற்றி பெற முடியாது. இதற்கு பாலிவுட் மட்டும் என்ன, டோலிவுட், கோலிவுட் எதுவுமே விதிவிலக்கு கிடையாது.
இருப்பினும் பாலிவுட்டில்தான் அதிகமான வாரிசு நடிகர்கள், நடிகைகள் இருக்கிறார்கள்.சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் அப்படி இருக்கிறார்கள். அவர்கள் சிலர் முன்னணி நட்சத்திரங்களாகவும் உயர்ந்திருக்கிறார்கள்.
அப்படியான வாரிசு நடிகர்களில் அமிதாப் குடும்பத்திலிருந்து ஒருவர் வந்திருக்கிறார். அமிதாப்பின் மகள் ஸ்வேதாவின் மகன் அகஸ்திய நந்தா "த ஆர்ச்சிஸ்" படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அப்படத்தின் பிரிமியர் காட்சியில் அமிதாப், அபிஷேக், அகஸ்திய நந்தா ஆகியோர் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் அமிதாப் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. அபிஷேக் வசூல் நடிகராக வளராத நிலையில் அகஸ்திய நந்தா அப்படி வளர்வாரா என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!