
ராஷ்மிகா போலி ஆபாச வீடியோவைத் தொடர்ந்து கஜோல் வீடியோ
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மட்டும் "மார்பிங்" செய்து "ஏஐ" தொழில்நுட்பம் மூலம், வேறு ஒருவரது ஆபாசமான வீடியோவைப் பகிர்ந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது குறித்து பல சினிமா பிரபலங்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை கஜோலின் வீடியோ ஒன்றை அது போல மார்பிங், ஏஐ செய்து வெளியிட்டுள்ளனர். மூன்று மாதம் முன்பு வெளியான அந்த போலி ஆபாச வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மற்றொரு பாலிவுட் நடிகையான கத்ரினா கைப் வீடியோவும் இது போல வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!