
இஸ்ரேல் போரில் சிக்கிக் கொண்ட ஹிந்தி நடிகை
இந்நிலையில் போர் நடந்து வரும் இஸ்ரேலில் பிரபல ஹிந்தி நடிகை நுஸ்ரத் பாருச்சா சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள அவர் இஸ்ரேலில் நடைபெற்ற ஹய்பா சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார். கடைசியாக அவரிடம் நேற்று மதியம் 12:30 மணி அளவில் பேசியதாக கூறப்படும் நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!