
அனிமல் படத்தில் அப்பா மகன் உறவு
இந்த படம் அப்பா அனில் கபூருக்கும், மகன் ரன்பீர் கபூருக்கும் இடையிலான உறவை ஆக்ஷன் களத்தில் சொல்கிறது என்பதை டீசர் மூலம் அறிய முடிகிறது. ரன்பீர் கபூரின் மனைவியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சாக்கெலட் பாயாக, அப்பாவிடம் அடிவாங்கும் மகனாக அறிமுகமாகும் ரன்பீர் கபூர், அதன் பிறகு தாடி வளர்த்து கொண்டு "பீஸ்ட்" மோடுக்கு மாறுகிறார். அப்பாவியான ரன்பீர் கபூர் ஏன் அனிமலாக மாறுகிறார் என்பது தான் படத்தின் கதை என்று அறிய முடிகிறது. டீசர் பெரும் வரவேற்புடன் பகிரப்பட்டு வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!