
வெல்கம்-3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
‛வெல்கம் டு த ஜங்கிள்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அஹ்மத் கான் இயக்குகிறார். அக்ஷய் குமார், சஞ்சய் டத், சுனில் ஷெட்டி, திஷா பதானி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரவீனா டாண்டன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2024 டிசம்பர் 20ம் தேதி அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதன் அறிவிப்பு வீடியோ யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும், முதல் இரண்டு பாகங்களில் நடித்த அனில் கபூர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!