
முன்பதிவில் சாதனை படைக்கும் ஜவான்
இப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு ஷாரூக்கான் நடித்து வெளிவந்த "பதான்" படத்தின் முதல் நாள் முன்பதிவு ஒரு லட்சத்து பதினேழாயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதே சாதனையாக இருந்தது. முதல் நாள் வசூலாக இந்தியாவில் 60 கோடிக்கு அதிகமாகவும், உலகம் முழுவதும் 120 கோடிக்கு அதிகமாகவும் வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருட ஜனவரியில் வெளிவந்த "பதான்" படம் ஆயிரம் கோடி வசூலைக் கடந்த சாதனை படைத்த நிலையில், "ஜவான்" படமும் அப்படி ஒரு சாதனை படைத்தால் ஒரே ஆண்டில் இரண்டு 1000 கோடி படங்களைக் கொடுத்து முதல் நடிகர் என்ற பெருமையைப் பெறுவார் ஷாரூக்கான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!