
எமர்ஜென்சி படத்தை பார்க்க விரும்பும் கரண் ஜோஹர் : கங்கனாவின் அல்டிமேட் ரியாக்சன்
பாலிவுட் செய்திகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு கங்கனாவுக்கும் கரண் ஜோஹருக்கும் இடையேயான பல வருட மோதல் குறித்து நன்றாகவே தெரியும். குறிப்பாக நெப்போட்டிசத்தை வளர்த்து விடுபவர் என்கிற ரீதியில் தொடர்ந்து கரண் ஜோஹர் மீது விமர்சனங்களை அடுக்கி வருபவர் தான் கங்கனா. இந்த நிலையில் தனது படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவலாக இருப்பதாக கூறியதற்கு தனக்கே உரிய நக்கலான பாணியில் பதிலளித்துள்ளார் கங்கனா.
இது குறித்து அவர் கூறும்போது, “ஏற்கனவே எனது இயக்கத்தில் மணிகர்ணிகா படம் வெளியானபோது இதே போல் தான் கூறினார் கரண் ஜோஹர். ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு அவர் மட்டுமல்ல, அந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பலரும் சேர்ந்து படத்தை சகட்டுமேனிக்கு விமர்சித்து நன்றாக ஓட வேண்டிய படத்தை அந்த வார இறுதியிலேயே சரிவுக்கு தள்ளி சந்தோஷப்பட்டார்கள். இப்போது எமர்ஜென்சி படத்தையும் பார்க்க கரண் ஜோஹர் ஆவலாக இருக்கிறார் என்பதை கேள்விப்பட்டவுடன் நான் பயந்துவிட்டேன்” என்று கிண்டலாக கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!