
இந்தியாவில் முதல் முறை: ஜவான் படத்தில் பணியாற்றிய 5 சர்வதேச சண்டை இயக்குனர்கள்
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜவான் படத்தின் சண்டை காட்சிகளுக்காக சர்வதேச அளவில் பிரபலமான 5 சண்டை பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். இவர்களுடன் இந்திய சண்டை இயக்குனர் அனல் அரசு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்த படங்களுக்கு சண்டை காட்சிகளை அமைத்துள்ளனர். ஜவான் அதிரடி ஆக்சன் காட்சிகளை உள்ளடக்கிய படம். இதில் கைகளால் தாக்கிக் கொள்ளும் சண்டைக்காட்சி. பைக், டிரக், கார் சேசிங் என பல வகையான சண்டைக் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆக்ஷன் காட்சிகள் அந்தந்த நிபுணர்களை கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!