
லீக்கான ஜவான் பட காட்சிகள் : மும்பை போலீசார் வழக்கு பதிவு
வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இருந்து பாடல்கள், டீசர் என தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஜவான் படத்தின் சில வீடியோ கிளிப்புகள் வெளியாகி படக்குழுவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மும்பை சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து புகாரை பதிவு செய்து எப்ஐஆர் போடப்பட்டுள்ள நிலையில் மும்பை போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!