
ஹிந்தியில் ராமாயணம்: டெஸ்ட் ஷுட் வேலைகள் ஆரம்பம்
இந்நிலையில் ஹிந்தியில் பிரபல இயக்குனரான நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், யஷ் மற்றும் பலர் நடிக்க ராமாயணக் காவியத்தை அப்படியே படமாக்க திட்டமிட்டுள்ளனர். அந்தக் காவியத்தின் தன்மை சிறிதும் குலையாமல் அந்தப் பழமையுடனும், கலாச்சாரத்துடனும் படமாக்கவே திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அனைத்தையும் முன்கூட்டியே சரியாகத் திட்டமிட்டு படமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்களாம்.
விரைவில் படக்குழுவினர் டெஸ்ட் ஷுட் ஒன்றையும் நடத்தப் போகிறார்களாம். அதில் ரன்பீர் கபூர், ஆலியா பட், யஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் ஷுட்டிற்காகவே மும்பையில் தனியாக ஒரு அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். டெஸ்ட் ஷுட் முடிந்து அது திருப்தியான பிறகே அடுத்த கட்ட அப்டேட்டை படக்குழு வெளியிடும் என்கிறார்கள். பாலிவுட்டின் மிகப் பிரம்மாண்டமான படைப்பாக இந்த "ராமாயணம்" உருவாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!